வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு


வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து - மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
x
தினத்தந்தி 1 Nov 2021 7:13 AM GMT (Updated: 1 Nov 2021 7:13 AM GMT)

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரை ஐகோர்ட்டு  தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தநிலையில்,  வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து குறித்த மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு  செய்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து என்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது  எனவும் மதுரைஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என  பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story