கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி..! + "||" + T20 worldcup, SouthAfrica won by 6 wickets.

டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி..!

டி20 உலகக்கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி..!
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபு தாபி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். நைம் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸ் 36 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள், தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல்  சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இறுதியில், 18.2 ஓவர்கள் முடிவில்  வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஷம்சி 2 விக்கெட்டுகளையும், ப்ரெடோரியஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் ஹென்றிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. தொடக்கவீரர் ஹென்றிக்ஸ் 4 ரன்னிலும், டி காக் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த வான் டெர் டுசன் நிதானமாக ஆடி 22 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பவுமா 31 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், 13.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், வங்காளதேச அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்...!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
2. வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி அபார வெற்றி
இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வாங்காளதேசத்தை புரட்டி எடுத்தது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான 2-ஆம் டெஸ்ட்: வெற்றி வாய்ப்பில் நியூசிலாந்து அணி
3-ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 126 ரன்களில் சுருண்ட வங்காளதேச அணி
முதல் இன்னிங்சில் வங்காளதேச அணி 126 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
5. வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து 521 ரன்கள் குவித்து டிக்ளேர்
நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் 252 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.