உலக செய்திகள்

கடற்கரையில் போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் - சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் + "||" + Two suspected gang members killed in beach shooting near Cancun resort in Mexico

கடற்கரையில் போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் - சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

கடற்கரையில் போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் - சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்
மெக்சிகோவில் உள்ள பிரபல கடற்கரை அருகே போதைப்பொருள் கும்பல் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அவ்வப்போது மோதல்களும் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், அந்நாட்டின் கன்குன் நகரில் பஹிமா பெடம்பிட்ச் என்ற கடற்கரை அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான இந்த கடற்கரை பகுதிக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், பஹிமா பெடம்பிட்ச் கடற்கரையில் நேற்று நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, அங்கு வந்திருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

கடற்கரை அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வருவதற்கு முன்னர் மோதலில் ஈடுபட்ட போதைபொருள் கடத்தல் கும்பல் கடற்கரை பகுதியில் இருந்து உடனடியாக தப்பியோடிவிட்டது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் நுழைந்தது புதிய வைரசான ‘புளோரோனா'..!!
மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
2. மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் மோதலில் 10 பேர் பலி!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.
3. மெக்சிகோ: சரக்குலாரி விபத்தில் 53 புலம்பெயர்ந்தோர் பலியான சோகம்
மெக்சிகோவில் சரக்குலாரி விபத்துக்குள்ளானதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. மெக்சிகோவில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
மெக்சிகோவில் 51 வயது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. மெக்சிகோ: சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதி விபத்து - 19 பேர் பலி
மெக்சிகோவில் சாலையோர கட்டிடம் மீது பஸ் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.