மாநில செய்திகள்

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல்...! + "||" + Internal party elections in AIADMK soon

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல்...!

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல்...!
அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல். செயற்குழு, பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது.
சென்னை

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்க்கலாமா?, வேண்டாமா? போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த் நிலையில் அ.தி.மு.க உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  

முதலில், அ.தி.மு.க. கிளை கழக தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு, ஒன்றிய கழகம், பேரூர், நகர கழகம், மாவட்டம் அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். இறுதியாக, தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடக்கும்.
அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

முதலில் உள்கட்சி தேர்தல், அடுத்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் என அ.தி.மு.க.வில் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. செயற்குழு, பொதுக்குழு அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதியில் நடைபெறும். உள்கட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் 10-ந்தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது நாளாக அ.தி.மு.க அலுவலகத்தில் பரபரப்பு...! விருப்பமனு வாங்க வந்தவர்கள் மீது தாக்குதல்...!
2-வது நாளாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்க வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
2. அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு
தேர்தலுக்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் ; அ.தி.மு.க.அமைப்பு விதியில் முக்கிய திருத்தம்
ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அ.தி.மு.க.அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
4. அ.தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது.
5. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனா...?
அ.தி.மு.க. வை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.