பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் 4 பேர் உயிரிழப்பு- மொத்த பலி எண்ணிக்கை 40- ஆக உயர்வு


பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த  மேலும் 4 பேர் உயிரிழப்பு- மொத்த பலி எண்ணிக்கை 40- ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Nov 2021 9:34 AM GMT (Updated: 6 Nov 2021 9:42 AM GMT)

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 40- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பரன் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், பேட்டையா மாவட்டத்தில் கள்ளச்சாரயம் அருந்திய 4 பேர் பலியாகியுள்ளனர். இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

மேற்கண்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் உறுதிபட தெரிவித்துள்ளார். 

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதற்காக காவல் நிலைய பொறுப்பாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரை 187 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 60ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


Next Story