எங்கள் மந்திரிகளுக்கு இந்தி தெரியாது; மிசோரம் முதல் மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம்


எங்கள் மந்திரிகளுக்கு இந்தி தெரியாது; மிசோரம் முதல் மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம்
x
தினத்தந்தி 9 Nov 2021 9:51 AM GMT (Updated: 9 Nov 2021 9:51 AM GMT)

எங்கள் மந்திரிகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது ஆதலால் புதிய தலைமைச் செயலாளரை மாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்தவரை நியமிக்க வேண்டும் என மிசோரம் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

மிசோரம் மாநிலத்தில் தலைமைச் செயலாளராக இருந்த லால்னுமாவியா சாகோ ஓய்வு பெற்றுவிட்டார். குஜராத் கேடரான சாகோ, ஓய்வு பெற்றபின் அவருக்குப் பதிலாக மத்தியஉள்துறை அமைச்சகம், ரேணு சர்மாவை புதியதலைமைச் செயலாளராக கடந்த மாதம் 29-ம் தேதி நியமித்தது.

மிசோ மொழி தெரியாமல் இந்தி, ஆங்கிலம் மட்டுமே ரேணு சர்மாவுக்கு தெரியும் என்பதால் நிர்வாக ரீதியாக பலசிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மிசோரம்  மாநில முதல் மந்திரி ஜோரம்தங்கா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி தலைமைச் செயலாளரை மாற்றக் கோரியுள்ளார்.  ஜோரம்தங்கா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது;-

எங்கள் மந்திரிகளுக்கு இந்தியும் தெரியாது, ஆங்கிலமும் புரியாது ஆதலால் புதிய தலைமைச் செயலாளரை மாற்றிவிட்டு மிசோ மொழி தெரிந்தவரை நியமிக்க வேண்டும்.மிசோரத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஜே.சி.ராம்தங்காவை தலைமைச் செயலாளராக நியமிக்கவும் எனவும் மிசோரம் மாநில முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளார். 


Next Story