தேசிய செய்திகள்

7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு + "||" + Prime Minister Narendra Modi meets NSAs of seven countries including 5 Central Asian countries and Russia and Iran

7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன்  பிரதமர் மோடி சந்திப்பு
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது
புதுடெல்லி,

ஈரான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெஸ்கிதான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசாகர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார்.

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற் குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் டெல்லியில் உள்ளனர்.

முன்னதாக இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் தோவல்,  “ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள  மாற்றங்கள்  அந்த நாட்டிற்கும் மட்டும் அல்லாது  அண்டை நாடுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியவை” என்றார்.  

டெல்லியில் நடைபெறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தலீபான்கள் அரசு,  இந்தியா  நடத்தும் இந்தக் கூட்டம்  பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களால் அதிகரித்த கொரோனா..!! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இமாசலபிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்ததற்கு பிரதமர் மோடி நடத்திய பொதுக்கூட்டங்களே காரணம் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றம் சாட்டின.
2. இசைக்கருவிகளை தீயிட்டு கொளுத்திய தலீபான்கள்; இசைக்கலைஞர் கண்ணீர்..!
இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
3. ஆப்கானிஸ்தான்; அமெரிக்க வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட பின் மாயமான குழந்தை கண்டுபிடிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை பிடித்ததும் அந்நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் அவசர அவசரமாக வெளியேறினார்.
4. வெறுப்புணர்வை தூண்டுபவர்களுக்கு உங்களது அமைதி தைரியம் அளிக்கிறது: பிரதமருக்கு ஐஐஎம் மாணவர்கள் கடிதம்
சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முஸ்லீம்களுக்கு எதிராக இந்து மத தலைவர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
5. ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் மருந்துகளை இந்தியா வழங்கியது
ஆப்கானிஸ்தானுக்கு 2 டன் அளவிலான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியா வழங்கியது.