மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை...! + "||" + Heavy rain with thunder in the next 3 hours ...!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை...!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய கனமழை...!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுன் கூடிய கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,

தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 430 கி.மீட்டர் கிழக்கு தென் கிழக்கு திசையில்  நிலை கொண்டுள்ளது.

புதுச்சேரிக்கு 420 கி.மீட்டர் கிழக்கு தென் கிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா - காரைக்கால் இடையே புதுச்சேரிக்கு வடக்கே தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும்.  இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் காரணமாக தமிழகத்தில் 2,356 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ஜனவரி 25: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பின் முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
3. ஜனவரி 24: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. கொரோனா பரவல்: தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து...!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
5. ஜனவரி 20: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.