காங்கிரஸ் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது: ராகுல் காந்தி


காங்கிரஸ் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 12 Nov 2021 4:19 PM GMT (Updated: 12 Nov 2021 4:19 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது என ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது: -  இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம், கங்கிரஸ் சித்தாந்தம் என இரண்டு வித சித்தாந்தங்கள் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இன்றைய இந்தியாவில் பாஜக- ஆர்.எஸ்.எஸ் வெறுப்புணர்வை பரப்புகின்றது என்பதை நாம்  ஒப்புக்கொண்டாக வேண்டும். 

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு கொள்கை, காங்கிரஸ் கட்சியின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத கொள்கையை மறைத்து விட்டது.இதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் எங்கள் சித்தாந்தம் உயிருடன் இருக்கிறது, துடிப்பானது ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது” என்றார். 

Next Story