மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது


மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது
x
தினத்தந்தி 20 Nov 2021 5:23 AM GMT (Updated: 20 Nov 2021 5:23 AM GMT)

மராட்டியத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டினர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து தானே குற்றப்பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

அம்மாவட்டத்தின் பிவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட சாரவல்லி என்ற கிராமத்தில் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 9 பேர் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 9 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் இந்தியாவில் தங்க எந்த வித ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story