தேசிய செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த ஒருவாரமாக புதிதாக தொற்று பாதிப்பு இல்லை + "||" + No new COVID-19 case in Andaman & Nicobar Islands for seven consecutive days

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த ஒருவாரமாக புதிதாக தொற்று பாதிப்பு இல்லை

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த ஒருவாரமாக புதிதாக தொற்று பாதிப்பு இல்லை
அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
போர்ட் பிளேர், 

அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 7 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. தீவுக்கூட்டமான அந்தமான் நிகோபர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,646- ஆக  உள்ளது.  கடந்த 14 ஆம் தேதி அந்தமானில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது. 

அதன்பிறகு இன்றைய தேதி வரையில் புதிதாக தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை.  அந்தமானில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 மட்டுமே. அந்தமானின் வடக்கு மற்றும் மத்திய பகுதி கொரோனா இல்லாத பகுதிகளாக உள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து நேற்று  4 பேர் குணம் அடைந்த நிலையில்,  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,545- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. யூனியன் பிரதேசத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129- ஆக உள்ளது. அந்தமானில் இதுவரை 6,25,682-மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தொற்று பாதிப்பு விகிதம் 1.23- சதவிகிதமாக உள்ளது.  அங்கு இதுவரை  5,34,324- பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் ஒரே நாளில் 52 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
2. புரோ கபடி லீக்; வீரர்களுக்கு கொரோனா தொற்று - போட்டிகளின் அட்டவணையில் மாற்றம்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சீன தலைநகர் பீஜிங்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
4. சரத்பாவருக்கு கொரோனா தொற்று..!
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை- மந்திரி சுதாகர் பேட்டி
மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.