கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்? கில்கிறிஸ்ட் ஆதரவு யாருக்கு...? + "||" + Ashes 2021: Adam Gilchrist backs Pat Cummins to be new Australia captain after Tim Paine 'sexting' scandal

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்? கில்கிறிஸ்ட் ஆதரவு யாருக்கு...?

ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார்? கில்கிறிஸ்ட் ஆதரவு யாருக்கு...?
பேட் கம்மின்ஸ் தான் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாக வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேனில் அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் டிம் பெய்ன், பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய குற்றச்சாட்டில் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பின் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்த போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில், ‘பேட் கம்மின்ஸ் தான் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டனாக வேண்டும்’ என முன்னாள் ஜாம்பவான் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

பேட் கம்மின்ஸ் குறித்து கில்கிறிஸ்ட் கூறியுள்ளதாவது,  “பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய பகுதியாக வளர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை பற்றி அதிக திறனை வளர்த்துள்ளார். அவருக்கு அனுபவமும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஆதரவை பேட் கம்மின்ஸ்க்கு தெரிவித்திருந்தார்.

பிற நாடுகளை போலவே ஆஸ்திரேலிய அணி நிர்வாகமும் பந்துவீச்சாளர்களை கேப்டன்களாக நியமிக்க தயக்கம் காட்டி வருகிறது. பேட்ஸ்மென்களே பெரும்பாலும் கேப்டனாக இருந்து வந்துள்ளனர்.

அப்படி கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில், ரேய் லிண்ட்வாலுக்கு அடுத்தபடியாக ஒரு பந்துவீச்சாளர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்  அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவது இது இரண்டாவது முறையாக அமையும்.

ஏற்கனவே கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், தான் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டிருந்தது. மீண்டும் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால், ரசிகர்களும் வீரர்களும் அவரை ஏற்றுக்கொள்வார்களா எனும் சந்தேகம் நிலவுகிறது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் அங்கு பிரதமர் பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் பதவிகளுக்கு இணையாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா நிவாரண பொருட்கள் வழங்கியது.
2. ஜோகோவிச் விசா ரத்து விவகாரம்: ஆஸ்திரேலிய நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
4. அடிலெய்ட் டென்னிஸ்: 100ம் நிலை வீராங்கனையிடம் தோல்வியடைந்த முன்னணி வீராங்கனை!
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான சபலென்கா 100-வது இடத்தில் இருக்கும் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
5. 2022 புத்தாண்டை வரவேற்றது ஆஸ்திரேலியா - இரவை பகலாக்கிய வானவேடிக்கைகள்...
இரவை பகலாக்கும் வானவேடிக்கைகள் மற்றும் வண்ணமயமான லேசர் ஒளிக்கற்றைகளைக் கொண்டு புத்தாண்டை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.