கிரிக்கெட்

டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..! + "||" + MS Dhoni watches Shahrukh Khan smash last-ball six to seal Syed Mushtaq Ali Trophy title

டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!

டோனி பார்த்து ரசித்த கடைசி பந்து சிக்சர்..!
சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை எம்.எஸ்.டோனி பார்த்து ரசித்துள்ளார்.
சென்னை, 

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி எதிர்கொண்டது. இதற்கு முன்பு 2019 -ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தமிழக அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில்  தமிழ்நாடு அணி களமிறங்கியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 

அதனை தொடர்ந்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்நிலையில் தமிழக அணி வீரர் ஷாருக்கான் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அசத்தினார். இதனால் தமிழக அணி  6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் டோனி, சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை பார்த்துக் கொண்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வெற்றியின் மூலம், சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. கர்நாடக அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. முன்னதாக கடந்த ஆண்டும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிஎஸ்கே அணியில் இப்போது சாய் கிஷோர், ஜெகதீசன், ஹரி நிஷாந்த் உள்ளிட்ட தமிழக வீரர்கள் உள்ள நிலையில், ஐ.பி.எல் 2022 சீசனில் ஷாருக்கான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடிப்பாரா என்ற ஆவல் நிலவுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 47,754 பேருக்கு தொற்று..!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,754 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது....!
கர்நாடகாவில் இன்று மேலும் 40,499 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. திடீரென இடிந்து விழுந்த தரைப்பாலம்: சிக்கிக்கொண்ட சரக்கு வாகனம்
கர்நாடகாவில் தரைப்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் சரக்கு வாகனம் சிக்கிக்கொண்டது.
4. கர்நாடகாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 41,457 பேருக்கு தொற்று..!
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,457 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடகா: பெங்களூருவில் வருகிற 31-ந் தேதி வரை 144 தடை நீட்டிப்பு..!
கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியாக வருகிற 31-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.