உலக செய்திகள்

பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள் + "||" + Pakistan: Lawyers allegedly beat up female activist in Karachi court

பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்

பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அங்கிருந்த வக்கீல்கள் அடித்து, உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர் லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் பலி
பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடில் பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
3. வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது
4. பயங்கரவாதம் வளர பள்ளி, கல்லூரிகளே காரணம் - பாக். மந்திரி சர்ச்சை பேச்சு
பயங்கரவாதம் வளர மதப்பள்ளிகள் (மதராசா) காரணம் அல்ல என்று பாகிஸ்தான் மந்திரி தெரிவித்துள்ளார்.
5. 2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது : ரமீஸ் ராஜா
2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.