உலக செய்திகள்

பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி + "||" + Attack by extremists in Burkina Faso kills at least 19

பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி

பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி
பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
ஒவ்கடங்கு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவர்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், பர்கினோ பசோவின் சமண்டென்ஹா மாகாணத்தில் ராணுவ முகாம் அருகே நேற்று பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பர்கினோ பசோ: பயங்கரவாதிகள் தாக்குதல் - 49 ராணுவ வீரர்கள் உள்பட 53 பேர் பலி
பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.