தேசிய செய்திகள்

மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் உயிரிழந்த நபர் + "||" + Man dies after being slapped by friend during drinking session

மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் உயிரிழந்த நபர்

மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் உயிரிழந்த நபர்
மது போதையில் நண்பன் கன்னத்தில் அறைந்ததில் நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா பகுதியை சேர்ந்தவர் ராகுல் கும்ளே (27). இவரது நண்பர் அவினாஷ் பாலிகர். 

நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு விபி நகர் பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிட்டத்தில் மது குடித்துள்ளனர். அப்போது ராகுல் கும்ளேக்கும், அவினாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கும்ளே தனது நண்பரான அவினாஷின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார். அந்த ஒற்றை அறையால் சுயநினைவின்றி அவினாஷ் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கும்ளே தனது நண்பரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவினாஷை பரிசோதனை செய்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறினார்.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் ராகுல் கும்ளேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம்: போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மராட்டியத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் புதிதாக 656 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
மராட்டியத்தில் புதிதாக மேலும் 656 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மராட்டியம்: 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - நைஜீரிய நாட்டவர் கைது
மராட்டியத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரியர் கைது செய்யப்பட்டார்.
4. மராட்டியத்தில் புதிதாக 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
மராட்டியத்தில் இன்று மேலும் 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது
மராட்டியத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.