கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை! + "||" + BCCIs 'halal' meat recommendation for Indian cricketers raises eyebrows

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹலால் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹலால் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி  உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் எதிரணியான நியூசிலாந்து அணி நிர்வாகம், தங்களது உணவுப் பட்டியலில்  மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி கட்டாயம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலின் படி, கோழி இறைச்சியும் ஆட்டு இறைச்சியும் மட்டுமே அசைவ உணவுகளாக உள்ளன. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.