தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து சிங்கத்தை சீண்டிய வாலிபர்..!


தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து சிங்கத்தை சீண்டிய வாலிபர்..!
x
தினத்தந்தி 24 Nov 2021 5:37 AM GMT (Updated: 24 Nov 2021 6:36 AM GMT)

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து சிங்கத்தை சீண்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்  நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஆப்பிரிக்க சிங்கம் இருந்த பகுதிக்குள் சுற்றித் திரிந்த 31 வயது நபர்  நேற்று பிற்பகல் ஊழியர்களால் மீட்கப்பட்டார்.


உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர்.  அவர் மீது புகார் அளித்தனர். அந்த நபர் ஜி சாய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் அந்த நபர்  ஒரு பாறையில் குனிந்து நின்று, சிங்கத்தை சீண்டுகிறார். பார்வையாளர்கள்  அந்த நபரை பார்த்து கூச்சலிடுவதும், கவனமாக இருக்கச் சொல்வதும், உதவிக்கு ஆட்களை அழைப்பதும் கேட்கிறது.

நேரு விலங்கியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“ஜி சாய் குமார், பார்வையாளர்களுக்கு தடைசெய்யப்பட்ட சிங்கம் இருக்கும்  பகுதிக்குள் குதித்து, பாறாங்கற்களுக்கு மேல் நடந்து சென்று உள்ளார்.   அந்த நபரை உயிரியல் பூங்கா ஊழியர்கள் மீட்டு பகதூர்புரா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story