உலக செய்திகள்

அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை... + "||" + Biden includes Taiwan among 110 invitees to democracy summit

அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை...

அமெரிக்கா தலைமையில் 'ஜனநாயக உச்சி மாநாடு’ - சீனா, ரஷியாவுக்கு அழைப்பில்லை...
அமெரிக்கா தலைமையில் நடைபெற உள்ள ஜனநாயக உச்சி மாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்கா தலைமையில் ‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 9 மற்றும் 10 ஆகிய இரு தேதிகளில் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளது. 

முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜனநாயக நாடுகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்தல் குறித்து தலைவர்கள் கலந்துரையாக இந்த உச்சிமாநாடு வழிவகுக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.      

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், ஈராக் உள்பட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சீனா, ரஷியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இந்த ஜனநாயக உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அழைப்பு விடுக்கவில்லை. 

ஆனால், இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பு தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று கூறி வரும் சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நீல நிற பெண் உருவம்.. ‘தினமும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் பெண்’ அமெரிக்காவில் வினோத நிகழ்வு!!
அந்த பெண்மணி வானில் வேற்றுகிரகவாசிகளை கண்டதாக தெரிவித்து பீதியை கிளப்பியுள்ளார்.
2. அமெரிக்கா-கனடா எல்லையில் கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை
அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் சட்ட விரோதமாக நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
3. தீப்பற்றி எரியும் தண்டவாளத்தில் பயணிக்கும் ரெயில்கள்...!
தண்டவாளத்தில் தீ வைக்கப்பட்டு அதில் ரெயில்கள் பயணிக்கின்றன.
4. அமெரிக்காவில் 9 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்புகள்..!!
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,90,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
5. அமெரிக்கா: கொரோனாவால் 2 ஆயிரத்தை கடந்த தினசரி இறப்பு எண்ணிக்கை
ஒவ்வொரு நாளும் சராசரியாக தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனாவால் அங்கு இறக்கிறார்கள்.