சினிமா செய்திகள்

"டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல் + "||" + Devoleena Bhattacharjee reveals her teacher 'misbehaved' with her

"டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்

"டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் “டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" என தேவோலீனா கூறினார்.
மும்பை

பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக்கலைஞருமான தேவோலீனா பட்டாச்சார்ஜி, சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறி இருந்தார். 

அதில்  தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார்.  மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 

பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது, 

“அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம்  தான் டியூஷனுக்குச் சென்றனர். 

திடீரென்று, ஒரு வாரம், அவர்கள் (என் நண்பர்கள்) டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன். 

அப்போது ஆசிரியர்  என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்  புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்”  என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகரின் மகன் ஓட்டலில் சிறை வைப்பு
மூணாறில் பிரபல நடிகர் ஒருவரின் மகன் ஓட்டலில் சிறை வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. இசை சரியில்லை என இசையமைப்பாளரை அவமதித்த பிரபல ஹீரோ
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்தவர். தமன் பின்னர் அவர் தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக மாறினார்.
3. இன்று பிறந்த நாள்: நயன்தாரா அழகின் பரிணாம வளர்ச்சி
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
4. அடுத்த சர்ச்சையில் கங்கனா ரனாவத்; சுதந்திரத்தைத் தொடர்ந்து காந்தி குறித்து சர்ச்சை கருத்து
இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார் நடிகை கங்கனா ரனாவத்
5. ரஜினியின் 'அண்ணாத்த' 13 நாளில் ரூ.225 கோடி வசூலை தாண்டி சாதனை
ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.