மாநில செய்திகள்

அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார் + "||" + AIADMK steering committee member Manikkam joined the BJP

அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்

அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.
சென்னை,

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்து இருந்த சோழவந்தான் தொகுதியின் முன்னாள் ஏம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்  ஜேபி நட்டா தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருப்பூரில் மூன்று நிகழ்ச்சிகளில் ஜேபி நட்டா கலந்து கொள்கிறார்.  

இதற்கிடையே, பாஜகவின் மாநில  செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் நிர்வாகிகள் சிலர்  பாஜகவில் இணைந்தனர். 

குறிப்பாக  அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணிக்கம், பாஜகவில் இணைந்துள்ளது  குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள்- அண்ணாமலை
புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
2. காங்கிரஸ் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது: ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது என ராகுல் காந்தி கூறினார்.
3. ”ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்” ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு
ஐ.என்.சி ( இந்திய தேசிய காங்கிரஸ்) என்றால் ஐ நீட் கமிஷன் ( எங்களுக்கு கமிஷன் தேவை) என்று அர்த்தம் என பாஜக சாடியுள்ளது.
4. முல்லை பெரியாறு அணை விவகாரம்: நவ.9-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
முல்லை பெரியாறு அணையில் நீர் இருப்பை அதிகரிக்க வலியுறுத்தி 5 மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 9 ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. மோடியின் இடத்துக்கு ராகுல் காந்தியால் ஒருபோதும் போட்டியிட முடியாது- பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்
இந்தியாவில் பா.ஜ.க. இன்னும் பத்தாண்டுகளுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர் கூறினார்.