மாநில செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை + "||" + Tomorrow is a school-only holiday in the Thiruvarur district

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர்,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் இன்று காலை மேற்கொண்ட ஆலோசனையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்திற்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.