மத்திய அரசின் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 4 மாதங்களுக்கு நீடிப்பு


மத்திய அரசின் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 4 மாதங்களுக்கு நீடிப்பு
x
தினத்தந்தி 24 Nov 2021 10:40 AM GMT (Updated: 24 Nov 2021 10:40 AM GMT)

நாடு முழுவதும் ரேசன் கடைகளில் ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஓப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவலைத் தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.

முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, வருகிற 30-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இப்பணி நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்தநிலையில்,  நாடு முழுவடும் ரேசன் கடைகள் மூலம் ஏழைகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கும் திட்டம் தொடரும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறியுள்ளார். மேலும் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Next Story