தேசிய செய்திகள்

கத்ரீனா கைப் கன்னம் போன்ற சாலைகள்....மந்திரியின் சர்ச்சை பேச்சு + "||" + Road like Katrina Kaifs cheeks Newly appointed Rajasthan Minister wades into controversy

கத்ரீனா கைப் கன்னம் போன்ற சாலைகள்....மந்திரியின் சர்ச்சை பேச்சு

கத்ரீனா கைப் கன்னம் போன்ற சாலைகள்....மந்திரியின் சர்ச்சை பேச்சு
எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் என ராஜேந்திர குடா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ,

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ -வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்  காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில்  மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

மந்திரியான  பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் ​​கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார். அப்போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர்.

 அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி "எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் " என கேலியாக தெரிவித்துள்ளார்.


பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது 
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் புதிய மந்திரிசபை இன்று பதவியேற்பு..!
ராஜஸ்தானில் மந்திரிகள் நேற்று கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனைத்தொடர்ந்து புதிய மந்திரிசபை இன்று பதவியேற்கிறது.
2. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா
நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.
3. பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் - அசோக் கெலாட்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
4. ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரிகள் 100 சதவீத செயல்திறனுடன் இயங்க அனுமதி
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ராஜஸ்தானில் பள்ளி, கல்லூரிகள் 100 சதவீத செயல்திறனுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 30 நாட்களில் தீர்ப்பு - குற்றவாளி தாய்மாமனுக்கு மரண தண்டனை
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியான சிறுமியின் தாய்மாமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.