தேசிய செய்திகள்

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் - அகிலேஷ் யாதவ் + "||" + If SP wins, will give farmers who died during farm law protests Rs 25L: Akhilesh

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் - அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
லக்னோ,

உத்தரப் பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., காங்.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்தநிலையில்,  சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி.) தலைவர் அகிலேஷ் யாதவ் டுவிட்டர் பதிவில் கூறியதாவது: 

2022 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். 

"ஒரு விவசாயியின் வாழ்க்கை விலைமதிப்பற்றது, ஏனென்றால் அவர் மற்றவர்களுக்காக  உணவு தானியங்களை பயிரிடுகின்றனர்," என பதிவிட்டுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள்  சங்கத்திற்கு  சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.