தேசிய செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு + "||" + No other judges can be added to the Arumugasami Commission: Supreme Court

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
புதுடெல்லி,

 முன்னாள் முதல்- அமைச்சர்  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு  கூறியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்கும் அப்போலோ தரப்பு வாதத்தை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. 

ஆறுமுகசாமி ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்ப்பது தற்போதைய ஆணையத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் எனக்கூறிய நீதிபதிகள்,  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் மருத்துவக்குழு ஒன்றை நியமிக்க ஆட்சேபணை இல்லை எனவும் தெரிவித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு: தமிழக அரசு நடவடிக்கை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்கி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
2. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டு
ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவ நிபுணர் குழுவை நியமிக்க உத்தரவிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சூசகமாக தெரிவித்துள்ளது.
3. லகிம்பூர் சம்பவம்: போலீஸ் விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
லகிம்பூர் வன்முறை சம்பவம் குறித்து உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
4. அதிமுக அரசு கூறியதால் தான் சிசிடிவி கேமிராவை அகற்றினோம் - அப்போலோ நிர்வாகம் விளக்கம்
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5. முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
முல்லைப்பெரியாறு அணையில் அதிகபட்சமாக எவ்வளவு நீரைத் தேக்கி வைக்கலாம் என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையத்தின் கண்காணிப்புக்குழு ஓரிரு நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.