சினிமா செய்திகள்

தொடர் வழக்கு :என்னை கைது செய்ய வந்தால்...! -நடிகை கங்கனா ரணாவத் + "||" + Kangana reacts to 'another FIR' with old pic: 'In case they come to arrest me'

தொடர் வழக்கு :என்னை கைது செய்ய வந்தால்...! -நடிகை கங்கனா ரணாவத்

தொடர் வழக்கு :என்னை கைது செய்ய வந்தால்...! -நடிகை கங்கனா ரணாவத்
எந்த நேரமும் நான் கைது செய்யப்படலாம் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார்.
மும்பை

பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக சமூகவலைதளத்தில், சீக்கியர்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து அவர் மீது மும்பை போலீசில் சீக்கியர்கள் அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், கங்கனா ரணாவத் வேண்டும் என்றே, உள்நோக்கத்துடன் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தானி அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், சீக்கியர்களை காலிஸ்தானி பயங்கரவாதிகள் எனவும் தெரிவித்ததாக கூறப்பட்டு இருந்தது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் அவதூறு தெரிவித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

மேலும் சீக்கிய அமைப்பினர் கங்கனா ரணாவத் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீலையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் சீக்கியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக மும்பை கார் போலீசார் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். வேண்டும் என்றே மத உணர்வுகளை புண்படுத்தியது, மத நம்பிக்கையை அவமதித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கங்கனா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை பகிர்ந்து உள்ளார்.அது கங்கனா 2014 ஆம் ஆண்டு போட்டோஷூட்டில் இருந்து  எடுத்த ஒரு பழைய படம்.  அதில் அவர் கையில் மது கோப்பையுடன்  போஸ் கொடுத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிசில் படத்தைப் பகிர்ந்துள்ள கங்கனா,  அவர்கள் என்னைக் கைது செய்ய வந்தால், வீட்டில் என் மனநிலை" என்று அதில் அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கங்கனாவிற்கு வழங்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெறுக - ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம்
நடிகை கங்கனா ரனாவத்திற்கு வழங்கப்பட்ட 'பத்மஸ்ரீ’ விருதை திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதிக்கு சீக்கிய அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
2. 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: அடேயப்பா ...! நடிகை கங்கனா ரனாவத்துக்கு என்ன கோபம் ...!
கங்கனா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘சோகம், அவமானம் மற்றும் முற்றிலும் நியாயமற்றது’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார்.
3. தியாகிகளை அவமரியாதை செய்தேனா? நிரூபித்தால் பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்கத் தயார்: கங்கனா ரனாவத்
ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய கங்கனா ரனாவத், ‘1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை எனப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
4. கங்கனா ரனாவத்துக்கு "பத்மஸ்ரீ" விருது: ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்
கங்கனா ரனாவத் "பத்மஸ்ரீ" விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
5. நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கும் டேட்டிங் நிகழ்ச்சி; ஓடிடியில் ஒளிபரப்பாகிறது
நடிகை கங்கனா ரனாவத் டேட்டிங் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார் ஓடிடியில் ஒளிபரப்பாகிறது