மாநில செய்திகள்

உச்சம் தொட்ட போது கொரோனாவை தடுப்பூசி மூலம் ஒழித்தவர் பிரதமர் மோடி - ஜே.பி நட்டா பேச்சு + "||" + Prime Minister Modi vaccinated Corona BJP President JP Nadda in Tamil Nadu

உச்சம் தொட்ட போது கொரோனாவை தடுப்பூசி மூலம் ஒழித்தவர் பிரதமர் மோடி - ஜே.பி நட்டா பேச்சு

உச்சம் தொட்ட போது கொரோனாவை  தடுப்பூசி மூலம்  ஒழித்தவர் பிரதமர் மோடி -  ஜே.பி நட்டா பேச்சு
எதிர்கட்சிகள் அதனை மோடி ஊசி , பாஜக ஊசி என பயமுறுத்தி பிரச்சாரம் செய்தனர்.
திருப்பூர்,

திருப்பூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசியதாவது:-

ஒருவன் தன் திறமையால் உயர முடியும் என்ற ஜனநாயக நெறிமுறைகள் பாஜகவில் மட்டுமே உள்ளது. வெளிப்படையான ஆட்சியை பாஜக விரும்புகிறது. தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் , தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும் தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். பாஜக மட்டுமே தமிழகம்  நலனுக்கான கட்சி. திமுக தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது.

கொரோனா காலத்தில் கோவிலுக்கு செல்ல அனுமதிக்காமல் செய்தது திமுக, பாஜக போராட்டத்திற்கு பின்னே அனுமதித்தது. 

கொரோனா தொற்று உச்சம் தொட்ட போது 9 மாத காலத்தில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் அதனை ஒழித்தவர் மோடி லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தார். எதிர்கட்சிகள் அதனை மோடி ஊசி , பாஜக ஊசி என பயமுறுத்தி பிரச்சாரம் செய்தனர். 108 கோடி பேருக்கு மேல் இன்று தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.