தேசிய செய்திகள்

சோதனையில் தப்பிக்க கட்டுக்கட்டாக பணத்தை தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைத்த அரசு அதிகாரி...! + "||" + Karnataka ACB recovers approximately Rs 13 lakhs during a raid at the residence of a PWD junior engineer in Kalaburagi

சோதனையில் தப்பிக்க கட்டுக்கட்டாக பணத்தை தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைத்த அரசு அதிகாரி...!

சோதனையில் தப்பிக்க கட்டுக்கட்டாக பணத்தை தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைத்த அரசு அதிகாரி...!
கர்நாடகாவில் லஞ்சம் வாங்கிய பணத்தை கட்டுக்கட்டாக தண்ணீர் வடியும் பைப்புகளில் ஒளித்து வைத்ததை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு,

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை பொறியாளர் சாந்தா கவுடா வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில்  ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் இருந்து தப்பிக்க கட்டுக்கட்டாக பணத்தை தண்ணீர் பைப்புகளில் ஒளித்து வைத்தது சோதனையில் தெரிய வந்துள்ளது. வீட்டில்  ரூ13 லட்சம்  உட்பட மொத்தம் ரூ.54 லட்சம்  மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.