மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 744 பேருக்கு கொரோனா + "||" + Corona for another 744 people in Tamil Nadu

தமிழகத்தில் மேலும் 744 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 744 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 1,01,624 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 744 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 741 இல் இருந்து 744 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 

கொரோனாவால் மேலும் 14 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 36,415 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8,484 ஆக குறைந்துள்ளது.

கொரோனாவில் இருந்து மேலும் 782 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,77,607 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  12 வயதிற்குட்பட்ட 53 சிறுவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

ஈரோட்டில் 78 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 81 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 119 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 117 ஆக குறைந்தது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.