மாநில செய்திகள்

மீரா ஜாக்சனுக்கு ஜாமின்- போக்சோ நீதிமன்றம் உத்தரவு + "||" + Mira Jackson granted bail by Pokmon court

மீரா ஜாக்சனுக்கு ஜாமின்- போக்சோ நீதிமன்றம் உத்தரவு

மீரா ஜாக்சனுக்கு ஜாமின்- போக்சோ நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பிளஸ்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கைதான பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு ஜாமின் வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

கோவையில் பிளஸ்டு  மாணவி  பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தில், பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம் காரணமாக மூன்று நாட்களுக்குப் பிறகு தனிப்படை போலீசார் கடந்த 14-ஆம் தேதி இரவு பெங்களூருவில் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து, கோவை அழைத்து வரப்பட்ட மீரா ஜாக்சனை கோவை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி பின் சிறையிலடைத்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், கோவையில் மாணவி தற்கொலை வழக்கில் கைதான மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியது.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இடைகால நிவாரணமாக ஒரு லட்சம் வழங்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.