உலக செய்திகள்

முதல் முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கிய ஏர்பஸ் விமானம்...!! + "||" + Airbus A340 plane lands on Antarctica for first time

முதல் முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கிய ஏர்பஸ் விமானம்...!!

முதல் முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கிய ஏர்பஸ் விமானம்...!!
ஏர்பஸ் ஏ340 விமானம் முதல் முறையாக அண்டார்டிகாவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
அண்டார்டிகா, 

‘ஹைபிளை’ என்ற தனியார் விமான நிறுவனம் தனது ஏர் பஸ் ஏ340 ரக விமானத்தை அண்டார்டிகாவில் தரையிறக்கி இந்த சாதனையை படைத்துள்ளது. 

முன்னதாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 2,500 நாட்டிகல் மைல்கள் தூரம் பறந்து, அண்டார்டிகாவில் உள்ள வுல்ப்ஸ் ஃபேங் (Wolf's Fang) நிறுவனத்தின் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்த்தது. இதன்மூலம் பனிப்பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவில் முதன்முறையாக ஏர்பஸ் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. விமானம் தரையிறங்கும் வகையில் தற்காலிகமாக இறங்குதளம் தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், தரையிறங்குவதில் ஏந்த பிரச்சனை ஏற்படவில்லை என்று அந்த விமானத்தின் விமானி கார்லோஸ் மிர்புரி தெரிவித்தார்.