மாநில செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Assembly Resolution on Sativari Survey: Anbumani Ramadas Insistence

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதியை நிலைநாட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது.

இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. “இனி முதல் மந்திரியாகவே சட்டசபைக்குள் நுழைவேன்’ சந்திரபாபு நாயுடு கண்ணீர்
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு அழுதது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
சாதிவாரி கணக்கெடுப்பை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: நிதிஷ்குமார்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஜார்கண்ட் மாநில அனைத்து கட்சி குழு, அமித்ஷாவை சந்தித்து இதே கோரிக்கையை விடுத்தது.
4. ‘சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’ - மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதி உள்ளார்.
5. சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை: லாலு பிரசாத் யாதவ் உறுதி
சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம் தேவை எனவும், இடஒதுக்கீட்டில் தேவைப்பட்டால் 50 சதவீதத்தை மேலும் அதிகரிக்கலாம் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.