உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி + "||" + 2 policemen killed in Peshawar firing

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் நகரில் உள்ள ஹயாதாபாத் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் போலீசார் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் : பாகிஸ்தான் அணி வெற்றி.
வங்காளதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது
2. ஒரே இன்னிங்சில் 8 விக்கெட்: வங்காளதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அசத்தல்
தற்போது வரை வங்காளதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 12 ரன்கள் எடுத்துள்ளது.
3. வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் - 300 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
4. இலங்கை நபர் எரித்து கொலை; 'இளமையின் குதூகலம், எப்போதும் நடப்பதுதான்’ - பாக்.மந்திரி சர்ச்சை பேச்சு
பாகிஸ்தானில் இலங்கை நபர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ‘இளமையின் குதூகலம்’ மற்றும் இது ‘எப்போதும் நடப்பது தான்’ என பாகிஸ்தான் மந்திரி கூறினார்.
5. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - விமானிகள் 2 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.