உலக செய்திகள்

சாலமன் தீவுகளில் வன்முறை: நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு..! + "||" + Solomon Islands parliament building set on fire during riots - Reports

சாலமன் தீவுகளில் வன்முறை: நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு..!

சாலமன் தீவுகளில் வன்முறை: நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு..!
சாலமன் தீவுகளில் ஏற்பட்ட வன்முறையின்போது, அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு தீவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹோனியாரா, 

தென்பசிபிக் பெருங்கடலில் நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு சாலமன் தீவுகள். இந்ந நாட்டின் பிரதமராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருபவர் மானசே சோகவரே. இந்த நிலையில் அண்மையில் இவர், தைவானுடனான தூதரக உறவை துண்டித்துவிட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அரசின் இந்த முடிவை நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் ஏற்க மறுத்தன. இதை தொடர்ந்து, பிரதமர் மானசே சோகவரேவை பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை விரட்டியடிக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. பின்னர் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது.

இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கும், அதன் அருகில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சாலமன் தீவுகள் நாட்டில் 2-ம் உலகப்போரின் குண்டு வெடித்து 2 பேர் சாவு
சாலமன் தீவுகள் நாட்டில் 2-ம் உலகப்போரின் குண்டு வெடித்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
3. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்த ராகுல் காந்தி
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி டிராக்டரில் வருகை தந்தார்.