தமிழகம் உள்பட 13 மாநிலங்களுக்கு ரூ.2,250 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Nov 2021 9:31 PM GMT (Updated: 24 Nov 2021 9:31 PM GMT)

ஆரம்ப சுகாதார வசதிகளை வலுப்படுத்த தமிழகம் உள்பட 13 மாநிலங்களுக்கு ரூ.2,250 கோடி கடனை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்க உள்ளது.

புதுடெல்லி, 

தமிழகம், மராட்டியம், கர்நாடகம் உள்பட 13 மாநிலங்களில் ஆரம்ப சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,250 கோடி) கடன் வழங்குகிறது.

இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) ராஜத் குமார் மிஷ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்திய இயக்குனர் டேகோ கோனிஷியும் கையெழுத்திட்டனர். இந்த கடன் உதவியால் 5 கோடியே 10 லட்சம் குடிசை பகுதிகளில் வசிக்கிற 25 கோடியே 60 லட்சம் நகர்ப்புற மக்கள் பலன் அடைவார்கள்.

இந்த கடன்தொகை ஆரம்ப சுகாதார வசதிகளை வலுப்படுத்தவும், நகர்ப்புறங்களில் பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story