தேசிய செய்திகள்

ஆமதாபாத்: கொரோனோ தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைவதை தடுக்க குழுக்கள்..! + "||" + Ahmedabad Civic Body Implements 'No Vaccine-No Entry' Rule In City

ஆமதாபாத்: கொரோனோ தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைவதை தடுக்க குழுக்கள்..!

ஆமதாபாத்: கொரோனோ தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைவதை தடுக்க குழுக்கள்..!
ஆமதாபாத்தில் கொரோனோ தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நுழைவதை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத், 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு முற்றிலும் கடிவாளம் போடும்வகையில் தடுப்பூசி போடும் பணியை மாநிலங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனாலும் இன்னும் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி நிர்வாகம், தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள், ஓட்டல்கள் போன்ற பொது இடங்களில் நுழைவதை தடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இரண்டாவது டோஸ் அல்லது 2 டோஸ் தடுப்பூசியும் போடாதவர்களை கண்டுபிடித்து எச்சரிக்கும் நடவடிக்கையை ஆமதாபாத் மாநகராட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. அதற்காக 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு வணிக வளாகங்கள், ஓட்டல்களில் இந்த குழுக்கள் 3 ஆயிரம் பேரை பரிசோதித்தன. அப்போது அவர்களில் 28 பேர் முதல் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போடாதது தெரியவந்தது. உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். புதிய அணியான ஆமதாபாத் மீதான சர்ச்சை குறித்து விசாரிக்க கமிட்டி: ஜெய்ஷா
ஐ. பி.எல்.லின் புது வரவான ஆமதாபாத் மீதான சர்ச்சை குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் என ஜெய்ஷா கூறியுள்ளார்.