மாநில செய்திகள்

18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் + "||" + Rain Countines in next 3 hours for 18 districts of Tamilnadu

18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், சென்னை, செங்கல்பட்டு, டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிகாலை முதல் பெய்து வரும் மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...!
தமிழகத்தின் ஒரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. கனமழை எதிரொலி: தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
3. கனமழை எதிரொலி: சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல 5-ந் தேதி வரை அனுமதி இல்லை
கனமழை எதிரொலியாக சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல 5-ந் தேதி வரை அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் - ஜி.கே. வாசன்
தமிழகத்தில் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மத்தியக்குழு மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
5. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு...!
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.