கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு + "||" + India have won the toss and have opted to bat against New Zealand

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
லக்னோ,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையேயேன டி20 தொடரை 0-3 என்ற கணக்கில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா:- 

சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா. 

நியூசிலாந்து:-

டாம் லாதம், வில்லியம் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் பிளன்டெல், ரஷின் ரவிந்திரா, டிம் சவுதி, அஜாஸ் பட்டேல், கைல் ஜாமிசன், வில்லியம் சமர்வெலி.