இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு...!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு...!
x
தினத்தந்தி 25 Nov 2021 4:42 AM GMT (Updated: 25 Nov 2021 11:48 AM GMT)

இந்தியாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 9 ஆயிரத்து 283- ஐ விட சற்று குறைவாகும். 

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 44 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 66 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story