மாநில செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...! + "||" + Car catches fire in road trip at Thiruvallur district.

ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...!

ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...!
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 


சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ஒரு குடும்பம் கோயம்பேட்டிலிருந்து சக்தியவேடு பகுதியில் உள்ள பெருவாயல் கோவிலுக்கு சென்றுள்ளனர்.  கார் சென்று கொண்டிருந்த போது இன்ஞ்சின் அடியில் இருந்து புகை வந்ததை கண்டறிந்த டிரைவர் காரில் இருந்து இறங்கி பார்த்துள்ளார்.

அப்போது, ஸ்கார்பியோ கார் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  

தகவலறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து,  கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருவள்ளூர் அருகே மாடு மீது ஆட்டோ மோதல்; டிரைவர் சாவு
திருவள்ளூர் அருகே மாடு மீது ஆட்டோ மோதியதில் சாலையோரம் கவிழ்ந்தது.
2. திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி
திருவள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
3. திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்
திருநின்றவூர் அருகே ஏரிப்பகுதியில் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமித்ததால் நத்தமேடு குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
4. திருவள்ளூர் மாவட்டம் வாகன சோதனையில் ரூ.13 லட்சம் கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி சாவு
திருவள்ளூர் அருகே ஏரியில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.