தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுப்பு


தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுப்பு
x
தினத்தந்தி 25 Nov 2021 1:10 PM GMT (Updated: 25 Nov 2021 1:10 PM GMT)

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில்,  தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம்,  ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள், நாளை (நவ.,26) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக, திருச்செந்தூர் கோவிலில் மழைநீர் புகுந்தது. இதனால், பிரகாரம் மூழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.  தூத்துக்குடியில் 25 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Next Story