நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக அம்ரித் நியமனம்: தமிழக அரசு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 5:00 PM GMT (Updated: 25 Nov 2021 5:00 PM GMT)

நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக அம்ரித்தை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீலகிரி, 

கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்ட இன்னசென்ட் திவ்யா, கடந்த சில நாட்களுக்கு முன் மாற்றப்பட்டு, கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். எஸ்.பி.அம்ரித், இதற்கு முன்பு நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பதவி வகித்து வந்துள்ளார். 

முன்னதாக யானை வழித்தட வழக்கில் நீலகிரி மாவட்ட கலெக்டராக இருந்து வந்த இன்னசென்ட் திவ்யாவை மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்திருந்தது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டராக ( கூடுதல் பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கியது. இந்த சூழலில் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு புதிய கலெக்டராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



Next Story