மாநில செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!! + "||" + Thundershowers at various places in Chennai

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். 

இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, வடபழனி, கே.கே. நகர், சாலிகிராமம், கோடம்பாக்கம், தியாகராய நகர், ராமாபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

மேலும், நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கொட்டிவாக்கம், மயிலாப்பூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தரமாக நடைபெறுகிறதா? என்பதை மாநகராட்சி தலைமை என்ஜினீயர் என்.மகேஷன் நள்ளிரவில் அதிரடி ஆய்வு செய்தார்.
3. சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை...!
ஆன்லைன் சூதாரட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால் சென்னையை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
4. சென்னையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் - ரூ.11.94 லட்சம் வசூல்
சென்னையில் நேற்று முக கவசம் அணியாத 5,917 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. சென்னையில் 66-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் 66-வது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.