மாநில செய்திகள்

நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்கிறது பாஜக..! ஆர்.எஸ்.பாரதி தாக்கு + "||" + The BJP is doing succession politics across the country - RS Bharathi attack

நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்கிறது பாஜக..! ஆர்.எஸ்.பாரதி தாக்கு

நாடு முழுவதும் வாரிசு அரசியல் செய்கிறது பாஜக..! ஆர்.எஸ்.பாரதி தாக்கு
நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பாஜக, திமுகவக் வாரிசு அரசியல் செய்கிறது என்று கூற தகுதியில்லை என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை, 

நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பா.ஜ.க. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி "வாரிசு அரசியல்" என்று கூறுவது வெட்க கேடானது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா “வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ” என்று “திமுக ஊழல் ஆட்சி நடத்துகிறது” என்று குற்றம் சாட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தனது கூட்டணிக் கட்சியிலிருந்தே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை சேர்ப்பதை திசை திருப்பி- எங்கே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அந்த கூட்டணியும் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் நேர்மையாகவும், மக்களின் நலனுக்காகவும் மட்டுமே நடைபெறும் திமுக ஆட்சியைப் பார்த்து குறை கூறுவது வியப்பளிக்கிறது.

பல வாரிசுகளை உருவாக்கி- அவர்களை சட்டமன்ற- பாராளுமன்ற உறுப்பினர்களாக்கி- நாடு முழுவதும் வாரிசு அரசியலைச் செய்து வரும் பா.ஜ.க. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சி ஆட்சியைப் பற்றி "வாரிசு அரசியல்" என்று கூறுவது வெட்க கேடானது. பாவம்- அவருக்கு எதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது என்று புரியவில்லை. எந்த வழியில் பொய் பிரச்சாரம் செய்தாலும்- தமிழ்நாடு மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் இப்படி அபாண்டமாக குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார்.

பத்தாண்டு காலம் அரசு நிர்வாகத்தை பாழ்படுத்தி- ஊழல், நிர்வாக சீர்கேடு என தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய அதிமுகவை அருகில் வைத்துக் கொண்டு "நிர்வாகம்" குறித்து திமுகவிற்கு பாடம் எடுக்க முயற்சி செய்திருக்கிறார் ஜே.பி. நட்டா. திமுக ஆட்சி இருந்த போதெல்லாம் தமிழ்நாடு எத்தகையை முன்னேற்றம் கண்டது என்பதன் அடையாளம் தான் அத்தனை சதிகளையும் முறியடித்து தமிழ்நாடு மக்கள் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு அளித்த மாபெரும் வெற்றி. அதை நட்டா உணர வேண்டும்.

மழை வெள்ள சேதங்களை தினமும் பார்வையிட்டு- மக்களுக்கு நிவாரணம் வழங்கி- பணிகளை முடுக்கி விட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமே. அப்படியொரு முதலமைச்சர் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலேயே இல்லை என்பதை ஏனோ நட்டா வசதியாக மறந்து விட்டது வேதனையளிக்கிறது. 

ஆகவே நல்லாட்சி வழங்கி- தமிழ்நாட்டு மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடிச் சென்று பணியாற்றும் முதல்-அமைச்சரைக் கொண்ட திமுக ஆட்சியைப் பார்த்த அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நட்டா பேசுவது- தன் கட்சி முதுகில் இருக்கும் அழுக்கை மறைக்கவா- அல்லது விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடக்கம் தொட்டே தி.மு.க.வின் ஆதரவும், போராட்டங்களும், ஆட்சிக்கு வந்த உடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களும் காரணமாக அமைந்து விட்டதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை. ஆகவே நட்டா அவர்கள் அரசியல் விழாக்களுக்கு வரும் போது "பொய் மூட்டைகளை" அவிழ்த்துக் கொட்டுவதை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்
அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ள சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.
2. நாடு முழுவதும் வீட்டு வேலை செய்வோர் பற்றிய கணக்கெடுப்பு: மத்திய அரசு தொடக்கம்
நாடு முழுவதும் முதல்முறையாக வீட்டு வேலை செய்வோர் பற்றிய கணக்கெடுப்பு பணியை மத்திய அரசு தொடங்கியது.
3. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் காவல்துறையினர் பணியாற்றுகிறார்கள்- அண்ணாமலை
புதுக்கோட்டையில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
4. காங்கிரஸ் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது: ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் துடிப்புடனும் உயிர்ப்புடனும் உள்ளது என ராகுல் காந்தி கூறினார்.
5. ”ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்” ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு
ஐ.என்.சி ( இந்திய தேசிய காங்கிரஸ்) என்றால் ஐ நீட் கமிஷன் ( எங்களுக்கு கமிஷன் தேவை) என்று அர்த்தம் என பாஜக சாடியுள்ளது.