தேசிய செய்திகள்

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை + "||" + WHO extremely concerned about increase in Covid-19 cases in Europe

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை

ஐரோப்பாவில் பெருகும் கொரோனா: உலக சுகாதார அமைப்பு கவலை
ஐரோப்பாவில் பெருகும் கொரோனா பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஜெனீவா, 

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இது உலக சுகாதார அமைப்புக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.

இது பற்றி அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பிரதிநிதி கூறுகையில், “இயற்கையாகவே நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கை, இறப்புகள் அதிகரித்துள்ளன. எந்த நாடும் மெத்தனமாக இருக்க முடியாது. இதன்விளைவாக சுகாதார அமைப்புகள் பலவும் சிரமப்பட தொடங்குகின்றன. மேலும் இது குளிர்காலத்தின் தொடக்கம்தான்” என குறிப்பிட்டார்.

தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாதவர்கள், தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வகையில், சிசிலி தீவில் 120 டிகிரி வெப்பம்
ஐரோப்பாவில் உள்ள சிசிலி தீவில் இதுவரை இல்லாத வகையில், 48.8 டிகிரி செல்சியஸ் (119.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்ப நிலை, நேற்று முன்தினம் பதிவாகி உள்ளது. இது உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு (டபுள்யு.எம்.ஓ) மூலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.