தேசிய செய்திகள்

ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா + "||" + 54 students of Odisha medical college down with COVID-19

ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா

ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா
ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வர், 

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் வீர சுரேந்திர சாய் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு படித்து வரும் மாணவர்களில் 22 பேருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டது. புதன்கிழமை, இது 34 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில், நேற்று மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது. அவர்கள் அதே ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆண்டு விழா காரணமாக, தொற்று பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது, நேரடி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் 49 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
2. டெல்லியில் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தற்போது 42,010 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
3. கேரளாவில் 50 ஆயிரத்தை தாண்டிய இன்றைய கொரோனா பாதிப்பு
இன்றைய கேரளாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது
4. கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் - உலக சுகாதார அமைப்பு தலைவர் உறுதி!
கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும். தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது.
5. கடலூர் கலெக்டருக்கு கொரோனா மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று
கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மயிலம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.