உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..! + "||" + Covid kills more than 1 lakh in Germany ..!

ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!

ஜெர்மனியில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியது..!
ஜெர்மனியில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி உள்ளது.
பெர்லின், 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உருவாகி 2 ஆண்டுகள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் 351 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 119 ஆக அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவில் ரஷியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சைத் தொடர்ந்து கொரோனாவால் 1 லட்சம் பலியைக் கடந்த 5-வது நாடு என்ற பெயரை ஜெர்மனி பெற்றுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 75 ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொரோனா தொடர்பான தரவுகளை வெளியிடும் ராபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு பல ஆஸ்பத்திரிகளிலும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதாக தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யா: முக கவசம் அணிய கூறியதால் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி..!
ரஷ்யாவில் முக கவசம் அணிய கூறியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
2. ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: புதிதாக 48,550 பேருக்கு தொற்று..!
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிப்பு அடைந்துள்ளன.
3. தரமணியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி புகைப்பட கலைஞர் பலி
தரமணியில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி புகைப்பட கலைஞர் பலி.
4. டெல்லியில் இன்று 65 பேருக்கு கொரோனா; 36 பேர் டிஸ்சார்ஜ்
டெல்லியில் தற்போது 404 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
5. கேரளாவில் இன்று 5,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 40,959 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.