உலக செய்திகள்

5-11 வயது குழந்தைகளுக்கு அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசி: ஐரோப்பா அங்கீகாரம் + "||" + EU regulator gives go-ahead to first COVID shot for 5-11 year olds

5-11 வயது குழந்தைகளுக்கு அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசி: ஐரோப்பா அங்கீகாரம்

5-11 வயது குழந்தைகளுக்கு அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசி: ஐரோப்பா அங்கீகாரம்
5-11 வயது குழந்தைகளுக்கு அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஐரோப்பா அங்கீகாரம் வழங்கி உள்ளது.
தி ஹேக், 

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் முகமை அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த முகமை, குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது இதுவே முதல்முறை.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிற நிலையில், தொடக்கப்பள்ளிகளுக்கு செல்கிற 5-11 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு இப்போது வழிபிறந்துள்ளது.