மாநில செய்திகள்

தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவு - எங்கு தெரியுமா? + "||" + Highest Rainfall occurs in southern tamilnadu on Yesterday

தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவு - எங்கு தெரியுமா?

தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவு - எங்கு தெரியுமா?
தென் தமிழகத்தில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி,

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தென் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான அதிகபட்ச மழை அளவு தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுவே தென் தமிழகத்தில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச மழை அளவாகும். அதேபோல், தூத்துக்குடியில், 26.6 சென்டிமீட்டரும், திருச்செந்தூரில் 24 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2. 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு...!
18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை
சென்னை, கடலுார், விழுப்புரம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை
கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடியில் இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.